படம் | பிசிசிஐ (எக்ஸ்)
கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கட்டாக் வந்தடைந்தது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கட்டாக் வந்தடைந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நாளை (பிப்ரவரி 9) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி இன்று கட்டாக் வந்தடைந்தது.

புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு வந்தடைந்த இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய அணி வீரர்கள் கட்டாக் வந்தடைந்த விடியோ பிசிசிஐ தரப்பில் பகிரப்பட்டுள்ளது.

நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது.

முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி, நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்

SCROLL FOR NEXT