ஐபிஎல் கோப்பை படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!

ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டுள்ளது.

DIN

ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. 13 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 23 ஆம் தேதி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது.

இறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT