ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.

நல்ல வாய்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் வங்கதேசம் விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே வலுவாக உள்ளது. ஆனால், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக பும்ரா என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறோம்.

இந்திய அணியில் அவர் இல்லாதது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வங்கதேசத்துக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. முகமது ஷமி அணியில் இணைந்துள்ளது மிகப் பெரிய விஷயம். அவர் உடல் தகுதியில் சற்று தடுமாறினாலும், முழு உடல் தகுதியுடன் பந்துவீசினால் வங்கதேசத்துக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா: நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

உயிரோவியம்... அனுமோள்!

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் பலி! ரூ.25 லட்சம் நிதியுதவி!

ஜப்பான் பயணம் நிறைவு! சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

SCROLL FOR NEXT