மகீஷ் தீக்சனா... 
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்த மகீஷ் தீக்சனா!

ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்த மகீஷ் தீக்சனா..

DIN

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன்று(பிப்.19) தொடங்கியது. இந்தியாவுக்கான போட்டி நாளை துபையில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்தியா- இங்கிலாந்து தொடர், நியூசிலாந்து - பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முத்தரப்பு தொடர், இலங்கை - ஆஸ்திரேலியா தொடர் ஆகியவை நடைபெற்று முடிந்துள்ளன. இதற்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் மட்டுமின்றி ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் , விராட் கோலி - 721 புள்ளிகள், ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் உள்ளிட்டோரும் புள்ளிப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்.

பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகளில் 4 விக்கெட்டை வீழ்த்திய மகீஷ் தீக்சனா ஆப்கனின் ரஷீத்கானைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

முதல் 10 இடங்களைப் பிடித்த பந்து வீச்சாளர்கள்

  1. மகீஷ் தீக்சனா-680 புள்ளிகள்

  2. ரஷீத்கான்-669 புள்ளிகள்

  3. பெர்னார்ட் ஸ்கால்ட்ஸ்-662 புள்ளிகள்

  4. குல்தீப் யாதவ்-652 புள்ளிகள்

  5. ஷாகீன் அப்ரிடி-646 புள்ளிகள்

  6. கேஷவ் மகராஜ்-642 புள்ளிகள்

  7. மிட்செல் சாண்ட்னர்-639 புள்ளிகள்

  8. மேட் ஹென்றி-632 புள்ளிகள்

  9. குடகேஷ் மோட்டி-632 புள்ளிகள்

  10. முகமது சிராஜ்-624 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT