ஃபகார் ஸமான் படம்: ஏபி
கிரிக்கெட்

காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!

பாகிஸ்தான் பேட்டர் ஃபகார் ஸமான் காயத்துடன் விளையாடியதை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஹபீஸ்.

DIN

முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் பாகிஸ்தான் பேட்டர் ஃபகார் ஸமான் காயத்துடன் விளையாடியதை விமர்சித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் முதல் ஓவரில் 2ஆவது பந்தில் எல்லைக் கோட்டருகே பந்தினை தடுக்கும்போது ஃபகார் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது.

அதனால் அவர் தொடக்க வீரராக களமிறங்கவில்லை. பின்னர் நம்.4இல் களமிறங்கி தடுமாற்றத்துடனே விளையாடினார்.

41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஃபகார் ஸமான் பிரேஸ்வெல் ஓவரில் போல்ட் ஆனார்.

ஸமானை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்

இது குறித்து முன்னாள் வீரரும் கேப்டனுமான முகமது ஹபீஸ் கூறியதாவது:

ஃபகார் ஸமானை நம்.4இல் களமிறக்கியவர்களுக்கு சாம்பியன்ஸ் டிராபியை பரிசளிக்கலாம். இது நீண்டதொரு போட்டி. அவர் வலியுடன் இருக்கிறார். அவரிடம் களத்தில் நின்று எல்லாவற்றையும் எல்லைக் கோட்டைத் தாண்டி அடிக்கச் சொல்லுவது அநியாயம். அப்படி எதிர்பார்க்கவும் முடியாது.

ரன்னிங் ஓடும்போது அவர் தடுமாறியதைப் பார்த்தோம். அது பாபர் அசாமை கூடுதல் அழுத்ததுக்கு உள்ளாக்கியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லஞ்சம் கேட்டதாகப் புகாா்: இரு காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

SCROLL FOR NEXT