சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 325 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அடுத்தாக நபி, ஓமர்சாய், ஷாகிதி மூவரும் 40 ரன்கள் அதிரடியாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்கள்.
இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3, லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
ஆப்கானிஸ்தான் ஸ்கோர் கார்டு
ரஹ்மானுல்லா குர்பாஸ் - 6
இப்ரஹிம் ஸத்ரான் - 177
செடிக்குல்லாஹ் அடல் - 4
ரஹ்மத் ஷா - 4
ஹஷ்மதுல்லா ஷாகிதி - 40
ஓமர்சாய் - 41
முகமது நபி - 40
குல்பதீன் நைப் - 1
ரஷித் கான் -1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.