கிளன் மேக்ஸ்வெல் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதிக்கான போட்டியிலும் ஆப்கானிஸ்தான் நீடிக்கிறது.

மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டுமல்ல...

அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் நாளை ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ள நிலையில், கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.

ஹஸ்மதுல்லா ஷகிதி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டும் நாங்கள் விளையாடவுள்ளோம் என நினைக்கிறீர்களா? எங்களிடம் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டுமன்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டங்கள் இருக்கின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது, எங்களுக்கு எதிராக மேக்ஸ்வெல் மிகவும் நன்றாக விளையாடினார் என்பது தெரியும். ஆனால், விளையாட்டில் அதுபோன்ற நாள்களும் இருக்கும்.

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். நாங்கள் அனைத்து எதிரணி குறித்தும் யோசிக்கிறோம். தனிப்பட்ட வீரர்களுக்கு எதிரான திட்டங்களோடு மட்டும் நாங்கள் ஆடுகளத்துக்கு வருவதில்லை. நாங்கள் எங்களது சிறந்த திட்டங்களுடன் ஆடுகளத்துக்கு வருகிறோம். நாங்கள் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டும் விளையாடவில்லை. ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (பிப்ரவரி 28) லாகூரில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT