மிட்செல் மார்ஷ் படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்: மார்ஷ் நீக்கம், ஆஸி. அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆஸி. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ்நீக்கப்பட்டுள்ளார்.

மார்ஷுக்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் அறிமுகமாகவிருக்கிறார். இவர் வேகப் பந்து வீச்சும் சுழல்பந்தும் வீசும் திறமையுடையவர்.

33 வயதாகும் மிட்செல் மார்ஷ் 4 போட்டிகளில் போதிய அளவுக்கு ரன்கள் அடிக்கவில்லை. 33 ஓவர்கள் மட்டுமே வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

நாளை (ஜன.3) சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணி குறித்து பாட் கம்மின்ஸ் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி

சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா,மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), பியூ வெப்ஸ்டர், நாதன் லயன், ஸ்காட் போலாண்ட், மிட்செல் ஸ்டார்க்.

4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸி. 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி

இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை. பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு நாளைதான் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT