இந்திய அணி வீரர்கள் படம் | AP
கிரிக்கெட்

இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை; கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பேட்டி!

இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை என கௌதம் கம்பீரின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார்.

DIN

இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் பேட்டியளித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பும் குறைந்தது.

இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. மெல்போர்ன் போட்டியில் ஏற்பட்டத் தோல்விக்குப் பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடப் போவதில்லை எனவும் கூறப்படுகிறது.

எந்தவொரு பிளவும் இல்லை

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்திய அணிக்குள் எந்தவொரு பிளவும் இல்லை என கௌதம் கம்பீரின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணி தோல்வியை சந்திக்கும்போது, அந்த அணி தொடர்பான விமர்சனங்கள் எழுவது வழக்கம். இந்திய அணி மீதான விமர்சனங்களும் அவ்வாறானவையே. இந்திய அணியை சிறப்பாக செயல்பட வைத்து வெற்றி பெற வேண்டும் என்பது கௌதம் கம்பீருக்குத் தெரியும். அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களின் திறன்களைக் கண்டறிந்து சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரியும். இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் அவரது ஆட்டத்தின் மீது அவரே அதிருப்தியில் இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஜனவரி 3) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

75 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT