விராட் கோலி. கோப்புப் படம்
கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசான் விராட் கோலி..! வாட்சன் புகழாரம்!

சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி கம்பேக் தருவாரென முன்னாள் ஆஸி. வீரர் வாட்சன் பேட்டியளித்துள்ளார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி கம்பேக் தருவாரென முன்னாள் ஆஸி. வீரர் வாட்சன் பேட்டியளித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சுமாரான ஃபார்மில் விளையாடி வருகிறார்.

8 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரியாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தில் ஆட்டமிழந்து விமர்சனதுக்கு உள்ளாகியுள்ளார்.

2-1 என ஆஸி. முன்னிலையில் உள்ளதால் கடைசி டெஸ்ட்டில் விராட் கோலி, ரோஹித் நீக்கப்படுவார்களென பலரும் கூறிவருகிறார்கள்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான தனது முதல் போட்டியாக பிப்.20 ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வாட்சன் கூறியதாவது:

தற்போதைய மோசமான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதன் தாக்கம் இருக்குமென நான் நினைக்கவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசான்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபையில் நடைபெறுவதால் முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையாக இருக்கும். இது இருவருக்கும் பேட்டிங்கை மேலும் இலகுவாக்கும் என நினைக்கிறேன்.

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசானாக விராட் கோலி இருக்கிறார். ஆமாம், அவர் எல்லா விதமான கிரிக்கெட்டிலும் மாஸ்டர்தான். ஆனால், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 57க்கும் அதிகமாக 93 ஸ்டிரைக் ரேட்டுடன் நீண்ட காலமாக விளையாடியுள்ளார்.

நீண்ட நாள்கள் இப்படி ஆடுவது மிகவும் பெரிய விஷயம். அதை நாம் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் பார்ப்போம். 2023 உலகக் கோப்பையில் ரோஹித்தைப் பார்த்தோம். அவர் சிறப்பான நிலையில் இருக்கும்போது ஆட்டத்தை தனியாக கொண்டு செல்வார்.

ஒருநாள் கிரிக்கெட்டினை உயிர்ப்புடன் வைக்கும் சாம்பியன்ஸ் டிராபி

இந்தியா பாகிஸ்தான் செல்லாதது துரதிஷ்டமானது. ஐசிசி போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் என்றாலே மிக முக்கியமானதாக இருக்கும்.

எப்படியானாலும் டி20, டெஸ்ட் ஆதிக்கம் மிகுந்த காலங்களில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட்டினை உயிருடன் வைத்திருக்கிறது என்றார்.

விராட் கோலி 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,906 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 58.18 ஆக இருக்கிறது. இதில் 50 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT