முகப்பு
கிரிக்கெட்

கான்ஸ்டாஸ் வேறுவிதமாக இருக்கிறார்..! வாட்சன் பகிர்ந்த தகவல்!

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை குறித்து முன்னாள் வீரர் வாட்சன் பேசியுள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:26 PM
சாம் கான்ஸ்டாஸ்
பகிர்:

பார்டர் கவாஸ்கர் தொடரில் அறிமுகமான இளம் வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் புகழ்ந்து பேசியுள்ளார்.

பும்ரா ஓவரில் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட் மூலமாக சிக்ஸர்கள் அடித்து ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அசத்திய கான்ஸ்டாஸ் 2ஆவது இன்னிங்ஸில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.

Advertisement

ஆஸி அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் 4ஆவது டெஸ்ட்டில் வென்றது.

இந்த நிலையில் சாம் கான்ஸ்டாஸ் குறித்து வாட்சன் கூறியதாவது:

சாம் கான்ஸ்டாஸ் பொதுவாக அமைதியான, கூச்ச சுபாவமுள்ள, அதிகம் சிந்திக்கக்கூடியவர். ஆனால், அவரை ஆடுகளத்தில் பார்க்கும்போது அதற்கு எதிராக வித்தியாசமான அவரது பக்கத்தினை பார்க்கிறோம். மிகப்பெரிய போட்டிகளில் தன்னை நிரூபிக்கும் குணத்தை இயல்பாகவே பெற்றிருக்கிறார்.

தொடரில் இருந்து வெளியேறாமல் கான்ஸ்டாஸ் வியக்கத்தக்க நம்பிக்கையை அளித்துள்ளார்.

மெல்போர்னில் இரண்டாவது இன்னிங்ஸில் சாம் கான்ஸ்டாஸுக்காக இந்தியா அணி தனது ஆட்டத்தை மாற்றியதை கண்டோம். ஃபீல்டிங் மாற்றம், பும்ரா இன்ஸ்விங் மூலம் விக்கெட் எடுத்து கொண்டாடினார்.

உலகின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக எப்படி தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதே அவருக்கான பரிணாமத்தை காட்டுகிறது.

விரைவாக தன்னை மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பமும் அதிரடியாக ஆடுவதற்கான திறமையும் அவரிடம் இருக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments