கிரிக்கெட்

பந்தைப் பிடிக்க முயன்று ஆஸி. வீரர்கள் நேருக்கு நேர் மோதல்! மருத்துவமனையில் அனுமதி

பந்தைப் பிடிக்க முயன்று ஆஸி. வீரர்கள் இருவர் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மருத்துவமனையில் அனுமதி..

DIN

பந்தைப் பிடிக்க முயன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காயமடைந்த இரு ஆஸ்திரேலிய வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று(ஜன.3) நடந்த சிட்னி தண்டர் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் போட்டியின் போது, ​​ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் டேனியல் சாம்ஸ் மற்றும் கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தைப் பிடிக்க முயன்று நேர்க்கு நேர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இன்னிங்ஸின் 16-வது ஓவரில், கூப்பர் கோனாலி மேல் அடித்து உயரமாகச் சென்ற பந்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டே பிடிக்க முயன்றனர். இதில், ஒருவரையொருவர் கவனிக்காமல் வேகமாக மோதினர்.

பான்கிராஃப்ட் மூக்கில் ரத்தம் வந்ததால், மைதானத்தில் மருத்துவ உதவியாளர்களின் உதவியோடு உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த மோதலைத் தொடர்ந்து சாம்ஸ் தனது சுயநினைவை இழந்தார்.

இரு வீரர்களும் வெளியேற்றப்பட்ட பின், 12 நிமிட இடைவேளைக்குப் பிறகு பான்கிராஃப்ட் மற்றும் சாம்ஸுக்குப் பதிலாக ஒல்லி டேவிஸ் மற்றும் ஹக் வெய்ப்ஜென் ஆகியோர் மாற்று வீரர்களாகக் களமிறக்கப்பட்டனர். பான்கிராஃப்ட் ஆஸ்திரேலியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

20 ஓவர்களின் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 177 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கிரீன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டேனியல் சாம்ஸ் மூன்று ஓவர்கள் வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

பின்னர், 20 ஓவர்களில் 179 ரன்கள் குவித்து இலக்கை எட்டிய சிட்னி தண்டர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT