ரிஷப் பந்த் படம் | AP
கிரிக்கெட்

அதிரடியாக விளையாடாதது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடாதது குறித்து ரிஷப் பந்த் பேசியுள்ளார்.

DIN

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடாதது குறித்து ரிஷப் பந்த் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் இன்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

டாப் ஆர்டர் மீண்டும் சொதப்பல்

முதல் நான்கு போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதைப் போன்று, கடைசிப் போட்டியிலும் அவர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் (10 ரன்கள்), கே.எல்.ராகுல் (4 ரன்கள்), ஷுப்மன் கில் (20 ரன்கள்), விராட் கோலி (17 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40 ரன்கள் எடுத்தார்.

அதிரடியாக விளையாடாதது ஏன்?

வழக்கமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரிஷப் பந்த் இன்று மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 98 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடாதது குறித்து ரிஷப் பந்த் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் பேசியதாவது: இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடும் விதமான வாய்ப்புகள் அமையவில்லை. ஏனெனில், ஆடுகளம் அதிரடியாக ஆடுவதற்கு ஏற்றாற்போல் இல்லை. அணியின் நிலையும் அதிரடியாக விளையாடுவதற்கு ஏற்ற நிலைமையில் இல்லை. சில நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக விளையாட வேண்டியிருக்கும். குறிப்பாக, ஆடுகளங்கள் விளையாடுவதற்கு மிகவும் சவாலானதாக இருக்கும்போது, பாதுகாப்பாக விளையாட வேண்டும். நான் ஆட்டமிழந்தால் அடுத்து இரண்டு மூன்று விக்கெட்டுகள் உடனடியாக ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்துவிடும். அதனால், நான் அதிரடியாக விளையாடவில்லை என்றார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாட முயன்று இரண்டு இன்னிங்ஸ்களிலும் முக்கியான தருணத்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT