வெப்ஸ்டர் உடன் ஸ்டீவ் ஸ்மித்.  படம்: ஏபி
கிரிக்கெட்

பிஜிடி தொடரில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிஜிடி தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிஜிடி தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த ஆஸ்திரேலியராக புதிய சாதனை படைத்துள்ளார்.

சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச்சுகளை பிடித்ததன் மூலம் பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்தவர்கள் (36) பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கொண்டாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்

இதன் மூலம் லக்‌ஷ்மணன், ரிக்கி பாண்டிங்குடன் சமன் செய்துள்ளார். குறைவான இன்னிங்ஸிங்களில் இந்த சாதனயை நிகழ்த்தியுள்ளார்.

46 கேட்ச்சுகளுடன் முதலிடத்தில் ராகுல் திராவிட் இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் 194 கேட்ச்சுகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட்டில் ராகுல் டிராவிட் 210 கேட்ச்சுகளுடன் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஜிடி தொடரில் அதிக கேட்ச்சுகள்

1. ராகுல் திராவிட் - (60 இன்னிங்ஸ்) - 46

2. ஸ்டீவ் ஸ்மித் - (42 இன்னிங்ஸ்) - 36

3. விவிஎஸ் லக்‌ஷ்மணன் - (54 இன்னிங்ஸ்) - 36

4. ரிக்கி பாண்டிங் - (57 இன்னிங்ஸ்) - 36

5. விராட் கோலி - (54 இன்னிங்ஸ்) - 31

6. மைக்கேல் கிளார்க் - (43 இன்னிங்ஸ்) - 29

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT