பும்ரா - கான்ஸ்டாஸ் மோதல்.  படம்: ஏபி
கிரிக்கெட்

பும்ரா - கான்ஸ்டாஸ் மோதல்..! இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!

ஆஸி. வீரர் கான்ஸ்டாஸுடன் இந்திய கேப்டன் பும்ரா கோபமாக பேசிய விடியோ வைரலாகி வருகிறது.

DIN

ஆஸி. வீரர் கான்ஸ்டாஸுடன் இந்திய கேப்டன் பும்ரா கோபமாக பேசிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்திய அணியில் ரோஹித் சர்மா விலகியதால் பும்ரா அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 72.2 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது.

மெல்போர்னில் தொடங்கிய மோதல்

கடந்த டெஸ்ட்டிலேயே பும்ரா - கான்ஸ்டாஸ் மோதல் ஆரம்பித்துவிட்டது. பும்ரா ஓவரில் கான்ஸ்டாஸ் ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர்கள் அடித்து உலகப் புகழ்ப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த கான்ஸ்டாஸ் 2ஆவது இன்னிங்ஸில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கு பும்ரா கொண்டாடினார்.

அதேபோல் பும்ரா ஆட்டமிழந்தபோது கான்ஸ்டாஸ் பும்ராவை பார்த்து சிரித்தபடி கொண்டாடினார்.

இந்த நிலையில் சிட்னி டெஸ்ட்டில் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார் கான்ஸ்டாஸ்.

ஆக்ரோஷமான கொண்டாட்டம்

3ஆவது ஓவரின் கடைசி பந்தினை வீசுவதற்கு முன்பு கவாஜா பந்தினை போடும் முன்பு சிறிது நேரம் எடுப்பார். அதனால் கோபமடைந்த பும்ரா ஏன் எனக் கேட்பார். அதற்காக கான்ஸ்டாஸும் பும்ராவும் கோபமாக ஏதோ பேசிக்கொள்வார்கள்.

கள நடுவர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்த பும்ரா வீசிய பந்தில் கவாஜா ஆட்டமிழப்பார். பும்ரா உடனடியாக கான்ஸ்டாஸ் பக்கம் ஓடி வருவார்.

இந்திய வீரர்கள் இந்த விக்கெட்டினை ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள்.

இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இந்த விடியோவை பகிர்ந்து பும்ராவை பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT