படம் | AP
கிரிக்கெட்

ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா

ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவது என எங்களுக்குத் தெரியும் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவது என எங்களுக்குத் தெரியும் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்தியாவை வீழ்த்தி பார்டர் - கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள உள்ளன.

ககிசோ ரபாடா கூறியதென்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவது என எங்களுக்குத் தெரியும் என ககிசோ ரபாடா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற மிகப் பெரிய வாய்ப்பு கண் முன் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது எப்போதும் கடுமையாக இருக்கும். ஏனெனில், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக விளையாடுபவர்கள்.

நாங்கள் மிகவும் சவாலான அணியாக இருப்போம். ஆஸ்திரேலிய அணியும் எங்களுக்கு எதிராக மிகுந்த சவாலளிப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். ஆனால், ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 16 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

Dementia வயதானவர்களுக்கான நோய் மட்டுமல்ல! | Dr. Porrselvi சொல்லும் முக்கிய தகவல்! | Psychologist

மனித மூளையை பாதிக்கும் புதிய தொற்று! தடுப்பது எப்படி? | Brain eating amoeba

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

SCROLL FOR NEXT