ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பாரென ஆஸி. தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் முழங்கால் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.
இதற்கடுத்து இலங்கை தொடரிலும் ஹேசில்வுட் பங்கேற்கமாட்டாரென தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸி. தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹேசில்வுட் பங்கேற்பார் என கூறியுள்ளார்.
கம்மின்ஸ் காயம் காரணமாக அந்தத் தொடரில் பங்கேற்பதில் சந்தேகமாக இருக்கையில் ஹேசில்வுட் செய்தி ஆஸி. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
ஜார்ஜ் பெய்லி கூறியதாவது:
ஹேசில்வுட் கடுமையாக உழைத்து வருகிறார். அவரது முழங்கால் காயம் குணமாகிக்கொண்டே வருகிறது.
இப்போதுதான் குணமாகிவரும் ஹேசில்வுட்டுக்கு இலங்கை தொடரில் விளையாடுவது கடினம். அவர் குணமாவதற்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது.
அவர்மீது அழுத்தம் தர விரும்பவில்லை. துரதிஷ்டவசமாக இலங்கை தொடரை இழக்கிறார். ஆனால், அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட ஹேசில்வுட் துடித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
34 வயதாகும் ஹேசில்வுட் டெஸ்ட்டில் 279 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 138 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.