கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடத்தப்படவுள்ளன. மற்ற அணிகளுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) ஞாயிற்றுக்கிழமை 15 வீரர்கள் கொண்ட அணியை உறுதி செய்தது, ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையில் அணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில், அவர்கள் அரையிறுதிப் போட்டிகள் வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இரண்டு உலகக்கோப்பைத் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஜிபுர் ரகுமான் அணியில் விலகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட கணுக்கால் காயத்தில் இருந்து அணிக்குத் திரும்பிய இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மானுல்லா குர்பாஸுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், குல்பாதின் நைப், ஹஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷீத் கான், ஏ.எம்.கசன்ஃபர், நூர் அகமது, ஃபரூக்கி, ஃபரித் மாலிக், நவீத் ஜத்ரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

தேநீா் கடைக்காரா் கொலை: இருவா் கைது

தனியாா் நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை இழப்பீட்டுடன் திருப்பி வழங்க உத்தரவு

நகராட்சி அலுவலகத்தில் தகராறு: இளைஞா் கைது

மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞருக்கு பதவி நீட்டிப்பு

SCROLL FOR NEXT