கிரிக்கெட்

தோனியின் துணிச்சல் யாருக்கும் இல்லை! -யுவராஜ் சிங்கின் தந்தை சுவாரசியம்

தோனியைப் போன்ற துணிச்சலான வீரர் இல்லை! - யுவராஜ் சிங்கின் அப்பா சொன்ன விஷயம்

DIN

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லாதா..? என்று ஏங்கிக்கிடந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, 1983-க்குப் பின் (28 ஆண்டுகளுக்குப் பின்) உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை தோனியையே சாரும். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முதுகெலும்பாக பங்களிப்பை அளித்தவர் யுவராஜ் சிங். அவருக்கே தொடர்நாயகன் விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்த ‘யுவராஜ் சிங்' எப்போதுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிடித்த வீரர். இந்த நிலையில், அவரின் தந்தை யோக்ராஜ் சிங், மகேந்திர சிங் தோனியை வெகுவாகப் பாராட்டி பேசியுள்ளார்.

எம். எஸ். தோனி மீது யுவராஜின் தந்தை அதிருப்தியில் இருப்பதென்பது, தோனி குறித்து அவர் பல்வேறு முறை பேசும்போதும் அவரது கருத்துகளில் இருந்து வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையில், தோனியை அவர் பாராட்டியிருப்பது பார்வையாளர்களின் புருவங்களை ஆச்சரியத்தில் உயரச் செய்துள்ளது.

எனினும், அதனைத்தொடர்ந்து யுவராஜ் சிங்குக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதும், இதனைச் சுட்டிக்காட்டி தோனி மீது யுவராஜின் தந்தை அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதும் தொடர் கதையாகியுள்ளது.

இந்த நிலையில், தோனியைப் பாராட்டி யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பேசியுள்ளதொரு காணொலி காட்சி சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், “தோனியை உத்வேகம் மிகுந்ததொரு கேப்டனாகப் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வீரர்களிடம் எதைச் செய்ய வேண்டும், வேண்டாமென பளிச்சென சொல்லும் துணிச்சல்மிக்கவர்” என்றும் தோனியை குறிப்பிட்டுள்ளார்.

“விக்கெட்டை துல்லியமாகக் கணித்து, பந்துவீச்சாளர்களிடம் எந்த இடத்தில் பந்துவீச வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

தோனியிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், அவர் துணிச்சலானதொரு மனிதர். ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மிட்செல் ஜான்சன் வீசிய பந்து, தோனியின் ஹெல்மட்டை பதம்பார்த்தது. ஆனால் அவர் சற்றும் அசரவில்லை, ஓர் அங்குலம்கூட அசையவுமில்லை. அடுத்த பந்தை சிக்ஸர் பறக்கவிட்டு அசத்தினார். அவரைப் போன்ற மனிதர்கள் சிலரே உள்ளனர்” என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT