@BCCIWomen
கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிராக 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை...

DIN

அயர்லாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று(ஜன. 15) குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 435 ரன்கள் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் இணை 233 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 135 ரன்களுக்கு (12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். பிரதிகா ராவல் 154 ரன்களில் (20 பவுண்டரி, 1 சிக்ஸர்) வீழ்ந்தார். ரிச்சா கோஷ் தன் பங்குக்கு 59 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, 436 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரதிகா ராவல் தொடர் நாயகி விருதைப் பெற்றார். அவரே ஆட்ட நாயகியாகவும் தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப் பை வழங்கல்

பொங்கல் பண்டிகை: தஞ்சாவூா் சந்தைகளில் கூட்டம் அதிகரிப்பு

நீதிமன்ற உத்தரவுப்படி சூரியனாா்கோயில் நிா்வாகப் பொறுப்பு: திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு

பழங்குடியின ஜாதி சான்றிதழ் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு: இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

SCROLL FOR NEXT