முகமது ஷமி (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

இந்திய அணிக்காக விளையாட எந்தவொரு காயத்திலிருந்தும் மீண்டு வரலாம்: முகமது ஷமி

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்தவொரு காயத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மீண்டு வரலாம் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்தவொரு காயத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மீண்டு வரலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 22) தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த டி20 தொடரின் மூலம், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பின், காயம் காரணமாக கிட்டத்தட்ட 14 மாதங்களாக அணியில் இடம்பெறவில்லை.

எத்தனை காயங்களையும் மீண்டு வரலாம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 22) தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்தவொரு காயத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மீண்டு வரலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு குறையவேக் கூடாது என நினைக்கிறேன். அப்படி தீராத வேட்கை இருக்கும்போது, எப்படிப்பட்ட காயமாக இருந்தாலும், எத்தனை முறை காயமடைந்தாலும் நீங்கள் மீண்டு வரலாம். இந்திய அணிக்காக எத்தனை முறை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் அது எனக்கு குறைவாகவே தெரிகிறது. ஏனெனில், ஒரு முறை எனக்கு கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டால், மீண்டும் அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காமல் போகலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

SCROLL FOR NEXT