ஷுப்மன் கில்  படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அஸ்வின் கருத்து!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்தப்படுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், இளம் வீரர் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

முற்போக்கு சிந்தனையுடன் கூடிய முடிவு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது இந்திய அணி நிர்வாகத்தின் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அஸ்வின் பேசியதாவது: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலிருந்து யாரை துணைக் கேப்டனாக நியமிக்க கருத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது சரியா? அல்லது தவறா? என்பது குறித்து நான் பேசவில்லை. ஆனால், ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. கடந்த தொடரின்போதும், அவர் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

நான் தவறாக கூறுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருப்பதாக நான் நம்புகிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது இந்திய அணி நிர்வாகத்தின் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய முடிவு. எதிர்காலத்தில் ஷுப்மன் கில் அணியை வழிநடத்த துணைக் கேப்டன் பொறுப்பு உதவியாக இருக்கலாம் என அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT