இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கும் அவரது மனைவியும் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் வீரேந்திர சேவாக். அதிரடி தொடக்க வீரராக இன்றுவரை போற்றப்படுபவர்.
இவர் ஆர்த்தி என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆர்யவிர் மற்றும் வேதந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆர்யவிர் சேவாக், 19 வயதுக்கு குறைவானோருக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சமீபகாலமாக சேவாக் அவரது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அவரது மனைவி இல்லாதது குறித்து பல்வேறு யூகங்களை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.
இதனிடையே, சேவாக் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரைஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர்.
இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக இணையதளம் முழுவதும் காட்டுத் தீயாய் செய்தி பரவி வருகின்றது. ஆனால், இந்த செய்திககள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருவர் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
திரை பிரபலங்களை தொடர்ந்து சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் விவாகரத்து செய்வது தொடர்கதையாகி வருகின்றது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் விவாகரத்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.