சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஹாரி ப்ரூக் படம் | AP
கிரிக்கெட்

சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 150 ரன்களைக் கடந்து அசத்தினர். ஹாரி ப்ரூக் 158 ரன்களும், ஜேமி ஸ்மித் 184* ரன்களும் எடுத்தனர். தற்போது, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

சதம் அடிப்பதில் உறுதி

சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க உதவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனேன். அப்போது, அடுத்த போட்டியில் கண்டிப்பாக சதம் விளாச வேண்டும் என நினைத்தேன். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாங்கள் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்துள்ளதாக நினைக்கிறோம். என்னால், எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

இந்திய அணி எங்களைக் காட்டிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். ஆனால், விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு நாங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினார்கள் என்றார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் முதல் இன்னிங்ஸில் 99 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

England batsman Harry Brook says he was determined to score a century.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

SCROLL FOR NEXT