இந்திய ரசிகர்களுக்கு பயத்தைக் காண்பித்த ஜேக்கப் பெத்தெல்..! 22 வயதில் வரலாற்றுச் சாதனை!
அரையிறுதிப் போட்டியில் அசத்திய 22 வயதான இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தெல் குறித்து...
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 22 வயதான இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தெல் சதம் அடித்து விளாசினார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணிலேயே 254 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்பதை கிரிக்கெட் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்.
இந்திய அணி முதலில் பேட்டி செய்து, 20 ஓவர்களில் 253/7 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 20 ஓவர்களில் 246/7 ரன்கள் எடுத்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஜேக்கப் பெத்தெல் நான்காம் இடத்தில் களமிறங்கி கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்தார். 48 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ரன் அவுட் மூலம் சோகத்துடன் வெளியேறினார்.
இந்தப் போட்டியை ரசிக்கும்படி மாற்றியது இவரது பேட்டிங்தான். இந்தியா எளிதாக வென்றுவிடும் என நினைத்த ரசிகர்களுக்கு சுப்ரமணியபுரன் படத்தில் வருவதுபோ, “சாவு பயத்தை காட்டிவிட்டார் பெத்தேல்” என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பாராட்டி வருகிறார்கள்.
அரையிறுதிப்போட்டியில் தோல்வியுற்றாலும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச முதல்தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ, டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீரராக ஜேக்கப் பெத்தெல் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஆஷஸ் போட்டியில் சதம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த பெத்தெல் இந்தியாவுக்கு எதிராக டி20யிலும் சதம் அடித்து 22 வயதில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
Jacob Bethell, who scared the Indian fans..! Historic achievement at the age of 22 in t20 world cup 2026!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.