FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஃபிஃபா உலகக்கோப்பை: பிரான்ஸை வீழ்த்தி 3-ம் இடத்தைப் பிடித்த இங்கிலாந்து!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 3-ம் இடத்துக்கான போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

Updated On : 19 ஜூலை 2026, 11:38 am IST
3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற இங்கிலாந்து அணி - X
பகிர்:

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா - ஸ்பெயின் அணிகள் தகுதிபெற்றுள்ளதைத் தொடர்ந்து இன்று இரவு 12.30-க்கு அப்போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக, நேற்று இரவு 3-ம் இடத்துக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில், அரையிறுதிப் போட்டிகளில் தோற்ற பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் பிரான்ஸின் தடுப்பாட்டத்தை இங்கிலாந்து எளிதாகக் கையாண்டது. முதல் 2 நிமிடங்களிலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் அந்த அணிக்கான கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சா இரண்டாவது கோலை அடித்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் புகாயோ சாகா ஒரு அசாத்தியமான கோலை அடித்து கணக்கை 3-ஆக உயர்த்தினார். அடுத்து மீண்டும் 45+1 நிமிடத்தில் புகாயோ சாகா அடித்த கோல் மூலம் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 4 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி புது உத்வேகத்தைப் பெற்று ஆட்டத்தை மாற்ற முனைந்தது. 48-வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த கோல் மூலம் தனது கோல் கணக்கை பிரான்ஸ் தொடங்கியது. பின்னர், 54-வது நிமிடத்தில் எம்பாப்பே உதவியுடன் பிராட்லி பார்கோலா அடுத்த கோலை அடித்தார். தொடர்ந்து, 66-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார் எம்பாப்பே.

பிரான்ஸ் அணி கோல் கணக்கை சமன் செய்ய முயற்சித்த நிலையில், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் கிடைத்த முக்கியமான பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்தார் இங்கிலாந்து வீரர் சாகா. அதன்மூலம் தனது ஹாட்ரிக் கோல்களை அடித்து இங்கிலாந்தை ஆசுவாசப்படுத்தினார்,

ஆனாலும், பிரான்ஸ் விடுவதாக இல்லை. 90+6 வது நிமிடத்தில் டெம்பேலே ஒரு கோல் அடித்தார். இதனால், 5 - 4 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னேறி வந்தது.

ஆனால், சில நிமிடங்களில் (90+8) இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் அடித்த கோல் மூலம் 6-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இதன்மூலம், பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026-ல் மூன்றாவது இடத்தை இங்கிலாந்து அணி பிடித்தது. இங்கிலாந்து அணி 1966 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற பின்னர் அந்த அணி பெற்றுள்ள சிறந்த இடம் இதுவே.

தோல்வியடைந்த போதும், ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் 22 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் கிலியன் எம்பாப்பே.

summary

FIFA World Cup: England defeats France to secure third place!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments