படம் | ஐசிசி
கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்றுடன் ஒருநாள் தொடர் நிறைவடைகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை மறுநாள் (ஜூலை 10) தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

17 பேர் கொண்ட அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி விவரம்

சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தாசுன் ஷானகா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிகா கருணாரத்னே, மதீஷா பதிரானா, நுவான் துஷாரா, பினுரா ஃபெர்னாண்டோ, ஈசன் மலிங்கா.

டி20 தொடர் அட்டவணை

முதல் டி20 - ஜூலை 10, கண்டி

இரண்டாவது டி20 - ஜூலை 13, தம்புல்லா

மூன்றாவது டி20 - ஜூலை 16, கொழும்பு

The Sri Lanka Cricket Board announced the squad for the T20 series against Bangladesh today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT