விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜஸ்பிரித் பும்ரா படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்.

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அசத்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 11) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 37-வது சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 44 ரன்களில் போல்டாக்கி அசத்தினார். அதன் பின், அவர் வீசிய அடுத்த ஓவரிலேயே ஜோ ரூட்டினை 104 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸை 0 ரன்களிலும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார்.

அபாரமாக பந்துவீசி வரும் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Fast bowler Jasprit Bumrah impressed on the second day of the third Test against England, taking three wickets in a short span.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெளியேற்றம்!

பாலவாக்கம் வேம்பு அம்மன்!

இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு

பாறையில் வலம்புரி விநாயகர்!

SCROLL FOR NEXT