முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி 2026, 3:45 pm IST
ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) - படம் | ஐசிசி
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இன்று (பிப்ரவரி 7) கோலாகலமாகத் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தொடரின் முதல் நாளான இன்று மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே திடலில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதுகின்றன.

Advertisement

Advertisement

ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான போட்டிக்காக நேற்று இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இந்த பயிற்சியின்போது, ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. அவருக்கு உடல் நிலை சற்று சரியில்லாதது போன்று தெரிவதால், பயிற்சியில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக முன்னெச்செரிக்கையாக அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக முதல் போட்டியில் அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

summary

It is reported that Indian pacer Jasprit Bumrah's participation in the first match against the USA in the T20 World Cup series is doubtful.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.