ஆட்ட நாயகன் விருது வென்ற ஜாஸ் பட்லர்.  படம்: எக்ஸ் / லன்ஸ்கிரிக்கெட், இசிபி.
கிரிக்கெட்

13,000 டி20 ரன்களை கடந்த பட்லர்..! விரைவில் உலக சாதனை படைப்பாரா?

ஜாஸ் பட்லர் டி20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் விடாலிட்டி பிளாஸ்ட் மென் டி20 தொடரில் லங்காஷயர் அணியும் யார்க்‌ஷியர் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் லங்காஷயர் அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் குவிக்க, யார்க்‌ஷாயர் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

லங்காஷயர் அணி சார்பிக் 77 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த அரைசதம் மூலம் பட்லர் டி20 போட்டிகளில் 13,000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 7-ஆவது வீரராகவும் இங்கிலாந்தின் வரிசையில் 2-ஆவது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

மொத்தமாக பட்லர் 457 டி20 போட்டிகளில் விளையாடி 13, 046 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 45.74ஆக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 145.97ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

ஐபிஎல் தொடரில் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 500 ரன்களை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

பட்லருக்கு முன்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 13,814 ரன்கள் குவிக்க, முதலிடத்தில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் இருக்கிறார்.

ஜாஸ் பட்லர் கூடுதலாக 1,500 ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.

England player Jos Buttler has reached a new milestone of 13,000 runs in T20Is.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

SCROLL FOR NEXT