சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் ஈஷ் சோதி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஜூலை 24) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 190 ரன்கள் குவிக்க, ஜிம்பாப்வே 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஈஷ் சோதி, 4 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம், நியூசிலாந்து அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவருக்கு முன்பாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி 164 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக நேற்றையப் போட்டியில் ஈஷ் சோதி பந்துவீசியது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
New Zealand player Ish Sodhi has set a new record in international T20 cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.