கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

முதல் முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்கள் புதிய சாதனை!

இந்திய அணியின் பேட்டர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணியின் பேட்டர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்குகிறது.

இந்திய பேட்டர்கள் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் நான்கு பேர் 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய வீரர்கள் நான்கு பேர் 400 ரன்களைக் கடப்பது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், துணைக் கேப்டன் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா நான்கு பேரும் 400 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் ஷுப்மன் கில் (722 ரன்கள்), கே.எல்.ராகுல் (511 ரன்கள்), ரிஷப் பந்த் (479 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (454 ரன்கள்) எடுத்துள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The Indian team's batsmen have set a new record in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிக்டாக் செயல்பட இனி தடை இல்லை! ஆனால்... இந்தியாவில் அல்ல!

லக்ஷ்மி டென்டல் பங்குகளை வாங்கிய ஐசிஐசிஐ புருடென்ஷியல்!

செப். 25-ல் மறுவெளியீடாகிறது விஜய்யின் குஷி படம்!

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

முத்துமாரியம்மன் கோயில் செடில் உற்சவம்

SCROLL FOR NEXT