ரிஷப் பந்த் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: ரிஷப் பந்த் விலகல்; தமிழக விக்கெட் கீப்பர் அணியில் சேர்ப்பு!

எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்குகிறது.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது பந்து பலமாக காலில் பட்டதால், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

ரிஷப் பந்த் விலகல்; தமிழ வீரர் சேர்ப்பு

கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 முதல் தொடங்கவுள்ள நிலையில், எலும்பு முறிவு காரணமாக ரிஷப் பந்த் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ரிஷப் பந்த்துக்குப் பதிலாக கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் என்.ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், அர்ஷ்தீப் சிங், என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT