அம்பத்தி ராயுடு கோப்புப் படம்
கிரிக்கெட்

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு; முதலிடம் யாருக்கு?

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்தியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு அண்மையில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன்களின் பெயர்கள் கூறப்பட, அம்பத்தி ராயுடு அவர்களுக்கான தரவரிசையைக் கூறினார். முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் பெயர் கூறப்பட, அவருக்கு மூன்றாவது இடத்தை ஒதுக்கினார் அம்பத்தி ராயுடு. அவருக்கு அடுத்தபடியாக கபில் தேவுக்கு 4-வது இடத்தைக் கொடுத்தார்.

ரோஹித் சர்மாவின் பெயர் கூறப்பட, அவரை இந்திய அணியின் இரண்டாவது சிறந்த கேப்டன் என தவரிசைப்படுத்தினார். இந்த தரவரிசையில் விராட் கோலிக்கு ஐந்தாவது இடமும், முகமது அசாரூதினுக்கு ஆறாவது இடமும் ஒதுக்கினார்.

தரவரிசையில் முதலிடம் மட்டும் மீதமிருக்க, அதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஒதுக்கினார் ராயுடு. இந்திய அணியின் சிறந்த கேப்டன்களுக்கான தரவரிசையில் தோனிக்கு அவர் முதலிடத்தை வழங்கினார்.

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்திய கேப்டன்கள் பின்வருமாறு,

1. மகேந்திர சிங் தோனி, 2. ரோஹித் சர்மா, 3. சௌரவ் கங்குலி, 4. கபில் தேவ், 5. விராட் கோலி, 6. முகமது அசாரூதின்

Former player Ambati Rayudu has ranked the best captains of the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

காற்று மாசு: பிஎஸ்- 4 ரக தரநிலைக்கு கீழான 500 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சமய்பூா் பத்லியில் எஸ்யுவி வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT