படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூலை 30) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் கிரைக் எர்வின் 39 ரன்களும், டஃபாட்ஸ்வா சிகா 30 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்து - 174/3

ஜிம்பாப்வே அணி 149 ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 31) உணவு இடைவேளையின்போது, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 41 ரன்கள் எடுத்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்கள் எடுத்தும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் டெவான் கான்வே அரைசதம் கடந்தார். அவர் 162 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் டேரில் மிட்செல் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

உணவு இடைவேளையின்போது, நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 25 ரன்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

During the lunch break in the first Test against Zimbabwe, New Zealand had scored 174 runs for the loss of 3 wickets in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT