ஜெய் ஷா, விராட் கோலியுடன் ராஜீவ் சுக்லா (நடுவில்..) 
கிரிக்கெட்

பிசிசிஐ-யின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!

பிசிசிஐ இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்படவுள்ளதைப் பற்றி...

DIN

பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதையொட்டி, அவருக்குப் பதிலாக பிசிசிஐயில் புதிய இடைக்காலத் தலைவராக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பதவியேற்கவுள்ளதாக பிசிசிஐயில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

வருகிற ஜூலை மாதத்தில் பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா மூன்று மாதங்கள் பதவி வகிப்பார் என்றும், செப்டம்பரில் நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலிக்குப் பிறகு புதிய தலைவராக ரோஜர் பின்னி 2022 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தேர்தலின் போது 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வருகிற ஜூலை 19 ஆம் தேதியன்று ரோஜர் பின்னி 70 வயதை எட்டுகிறார். பிசிசிஐ தலைவருக்கான வயது வரம்பு 70. அதனாலேயே புதிய தலைவருக்கான தேர்வு நடைபெற்றுள்ளது.

ரோஜர் பின்னி தலைவராக இருந்தபோது இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இரண்டையும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

ஒளிவீசும் நிலம்... லைலா!

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

SCROLL FOR NEXT