சசித்ரா சேனநாயக் படம்: முகநூல் / சசித்ரா சேனநாயக்
கிரிக்கெட்

சூதாட்ட புகாரில் கைதான முன்னாள் இலங்கை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மீதான சூதாட்டம் குறித்து...

DIN

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ரா சேனநாயக் மீது சூதாட்டத்திற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்காக 1 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். பந்துவீச்சில் 78 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதன்முதலாக தொடங்கிய லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) தொடங்கியது.

அப்போது, கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிய இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபட அணுகியுள்ளார்.

40 வயதான சேனநாயக் துபையில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கையின் செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியது.

இதற்காக கைது செய்யப்பட்ட சேனநாயக் கடந்த 2023-இல் பிணையில் வெளி வந்தார்.

இந்நிலையில், இலங்கையின் அம்பாந்தோட்ட உயர் நீதிமன்றம் சூதாட்டத்தை உறுதிசெய்துள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக்குப் பிறகு இதுதான் தேசிய அளவில் முதல் சூதாட்டமாக இருக்கிறது.

சேனநாயக் மற்றுமொரு இலங்கை வீரர் தரிந்து ரத்னநாயகேவையும் சூதாட்டத்தில் ஈடுபடவைக்க அணுகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT