ஜோஷ் ஹேசில்வுட் படம்: ஐசிசி
கிரிக்கெட்

என் வாழ்க்கையின் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன்: ஹேசில்வுட்

ஆஸி. வீரர் ஜோஷ் ஹேசில்வுட் அளித்த பேட்டியில் கூறியதாவது...

DIN

ஆஸி. வீரர் ஜோஷ் ஹேசில்வுட், “நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன்” எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் (34) இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 279 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வென்றதில் இவரது பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி முன்னேறியுள்ள நிலையில் ஹேசில்வுட் அணியில் இணைந்தார்.

பயிற்சியைத் தொடங்கிய ஹேசில்வுட் பேட்டியில் கூறியதாவது:

2023-இல் இருந்தது போலவே நன்றாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் என்னுடைய விக்கெட்டுகள் நன்றாகவே இருக்கின்றன.

திறமையின்படி பார்த்தால் நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன். என்னுடைய உடலை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.

என்னுடைய ஒரே பிரச்னையாக தீவிரத்தன்மை மட்டும்தான் இருந்தது. தினமும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வருகிறோம்.

பந்துவீச்சுப் பயிற்சியிலும் செஷன் வாரியாக செய்து வருகிறோம். முடிந்த அளவுக்கு எங்களை சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள பயிற்சி எடுத்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT