ஷுப்மன் கில் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது: முன்னாள் கேப்டன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வை அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை இளம் வீரர் ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். ரிஷப் பந்த் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம் காத்திருக்கிறது

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்த நிலையில், இளம் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது எப்போதும் சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. இந்த முறை இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை இளம் வீரரான ஷுப்மன் கில் வழிநடத்தவுள்ளார். இளம் வீரர்கள் எவ்வாறு செயல்படவுள்ளார்கள் என்பதைக் காண அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக இளம் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருக்கிறது என்றார்.

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் அரிதாக வென்றுள்ளது என்பதையே வரலாறு கூறுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் மூன்று முறை மட்டுமே டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 1971, 1986 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

மனைப்பட்டா வழங்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்

திருவத்திபுரத்தில் செப்.10,12, அக்.9-இல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

அரசுப் பேருந்து மரத்தில் மோதி வயலில் இறங்கி விபத்து

SCROLL FOR NEXT