எம்.எஸ்.தோனி.  படம்: சிஎஸ்கே.
கிரிக்கெட்

எம்.எஸ்.தோனி தனித்துவமான கேப்டன்..! ஜஸ்டின் லாங்கர் புகழாரம்!

ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற தோனிக்கு முன்னாள் ஆஸி. வீரர் கூறியதாவது...

DIN

ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் (ஹால் ஆஃப் ஃபேம்) விருதுக்கு தோனி தேர்வாகியுள்ளதற்கு முன்னாள் ஆஸி. வீரர் “தோனி தனித்துவமானவர்” எனப் புகழ்ந்து கூறியுள்ளார்.

மேத்யூ ஹைடன், ஹாசீம் அம்லா, கிரீம் ஸ்மித், டேனியல் வெட்டோரி, சனா மிர், சாரா டெய்லர், தோனி ஆகிய ஏழ்வருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

பலரும் தோனிக்கு வாழ்த்து கூறிவரும் நிலையில் முன்னாள் ஆஸி. வீரரும் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் கூறியது கவனம் ஈர்த்துள்ளது.

இந்தியர்கள் வரிசையில் 11-ஆவது நபராக இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை தோனி பெற்றுள்ளார்.

தோனி குறித்து ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:

எம்.எஸ்.தோனி எந்த காலத்துக்குமான தலைசிறந்தவர். அனைத்து கேப்டன்களும் தோனியைப் போலவே இருக்க விரும்புவர். ஆனால், யாராலும் தோனியாக முடியாது. ஏனெனில் தோனி தனித்துவமான கேப்டன், தனித்துவமான தலைவர், தனித்துவமான மனிதர்.

தோனிக்கு எதிராக எப்போது விளையாடினாலும் ஃபினிஷராகிய அவர் ஆட்டமிழக்கும்வரை போட்டி முடிவதில்லை எனக் கூறியுள்ளார்.

ஐசிசி டி20, ஒருநாள், சாம்பியன் டிராபி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக எம்.எஸ்.தோனி இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

கவினின் பெற்றோருக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்: கனிமொழி

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!

SCROLL FOR NEXT