இந்திய டெஸ்ட் அணியினர்.. 
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு என்பதைப் பற்றி...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டி நாளை(ஜூன் 11) இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவிருக்கின்றன.

கடந்த இரண்டு தொடர்களிலும் இரண்டாமிடம் பிடித்த இந்திய அணி, இந்தத் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் ஆகிய தொடர்களால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால், மூன்றாம் இடம் பிடித்தது.

முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு 36 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படவிருக்கின்றன. இது இந்திய மதிப்பில் ரூ. 30 கோடியாகும். அதேபோன்று இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 21 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 18 கோடி) கிடைக்கும். இது கடந்தாண்டைவிட 16 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும்.

மூன்றாமிடம் பிடித்த இந்திய அணிக்கு 14.40 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைக்கும். இது இந்திய மதிப்பில் ரூ.12.32 கோடியாகும்.

மற்ற அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்

  • முதல் பரிசு - 36 லட்சம் டாலர்கள்

  • 2-வது பரிசு - 21 லட்சம் டாலர்கள்

  • 3-வது இடம் - இந்தியா (14.40 லட்சம் டாலர்கள்)

  • 4-வது இடம் - நியூசிலாந்து (10 லட்சம் டாலர்கள்)

  • 5-வது இடம் - இங்கிலாந்து (9, 60,000 டாலர்கள்)

  • 6-வது இடம் - இலங்கை (8,40,000 டாலர்கள்)

  • 7-வது இடம் - வங்கதேசம் (7,20,000 டாலர்கள்)

  • 8-வது இடம் - மேற்கிந்திய தீவுகள் (6,00,00 டாலர்கள்)

  • 9-வது இடம் - பாகிஸ்தான் (4,80,000 டாலர்கள்)

இதையும் படிக்க: பெண் நடுவருடன் வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

காவல்துறை அதிகாரியாக சூர்யா?

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

SCROLL FOR NEXT