ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 10) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இரண்டு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுவதென்ன?
Advertisement
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக, ககிசோ ரபாடா பந்துவீச்சு மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்டீவ் ஸ்மித் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதேபோல, ககிசோ ரபாடா பந்துவீச்சை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். அதனால், ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.