ஐசிசி வெளியிட்ட போஸ்டர்.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

அசத்தும் தென்னாப்பிரிக்கா: 4-ஆவது ஓவரில் முதல் ரன் எடுத்த ஆஸி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் 3 ஓவர்கள் ரன்கள் இல்லாமல் மெய்டன் ஆனது.

DIN

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் 3 ஓவர்கள் ரன்கள் இல்லாமல் மெய்டன் ஆனது. ஆஸி.க்கு முதல் ரன் 3.3ஆவது ஓவரில்தான் கிடைத்தது.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து ரபாடா அசத்தி வருகிறார்.

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கியிருக்கும் மார்னஸ் லபுஷேன் சிறப்பாகத் தொடங்கியுள்ளார்.

ஆஸி. காக இறுதிப் போட்டியில் முதல் ரன்னை லபுஷேன் எடுத்தார்.

மார்கோ யான்சென் வீசிய 4ஆவது ஓவரில் 4ஆவது பந்தில் லபுஷேனுக்கு இன்சைடு எட்ஜ் வாங்கி 2 ரன்கள் கிடைத்தது.

அதே ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. முதல் 3 ஓவர்கள் மெய்டனில் முடிய 4ஆவது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது.

ரபாடா வீசிய 3 ஓவர்களும் மெய்டனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 4ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

யான்சென் 3 ஓவர்களில் 10க்கும் அதிகமான ரன்களை வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

SCROLL FOR NEXT