சதமடித்த மகிழ்ச்சியில் முஷ்ஃபிகுர் ரஹிம்.  படம்: ஏபி
கிரிக்கெட்

கில்கிறிஸ்டை முந்தி முஷ்ஃபிகுர் ரஹிம் உலக சாதனை!

வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் நிகழ்த்திய உலக சாதனை குறித்து...

DIN

வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் கில்கிறிஸ்டை முந்தி அதிக ரன்கள் எடுத்தவர் என்ற உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 423/4 ரன்கள் குவித்துள்ளது. மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிம் 159 என்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.

சதமடித்த மகிழ்ச்சியில் முஷ்ஃபிகுர் ரஹிம்.

இத்துடன் டெஸ்ட்டில் 6,214 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7795 ரன்கள், டி20யில் 1500 ரன்கள் என மொத்தமாக 15,509 சர்வதேச ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஒரேயொரு பந்துகூட வீசாமல் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 15,509 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஆஸி.யின் ஆடம் கில்கிறிஸ்ட் 15,461 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருப்பவர்கள்

1. முஷ்ஃபிகுர் ரஹிம் - 15, 509

2. ஆடம் கில்கிறிஸ்ட் - 15, 461

3. குவிண்டன் டி காக் - 12, 654

இந்தியாவின் எம்.எஸ்.தோனி அதிக ரன்கள் அடித்திருந்தாலும் அவர் பந்துவீசி இருப்பதால் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT