ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன். படங்கள்: ஏபி
கிரிக்கெட்

ஸ்மித் காயம், லபுஷேன் நீக்கம்: இளம் வீரர்களுடன் களமிறங்கும் ஆஸி.!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடும் ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடும் ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டியில் ஆஸி. அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது.

அந்தப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ஸ்மித் விரலில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் மேற்கிந்தித் தீவுகளுடனான தொடரில் விளையாடமாட்டார்.

மேற்கிந்தித் தீவுகள் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி வரும் ஜூன்.25 முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

ஸ்மித் காயம், லபுஷேன் நீக்கம்

இந்த அணியில் லபுஷேன் பிளேயிங் லெவனில் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரன்கள் குவிக்காமல் இருக்கும் லபுஷேன் ஆட்டமிழப்பது ஆஸி. அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மித், லபுஷேனுக்குப் பதிலாக ஜோஷ் இங்லீஷ், சாம் கான்ஸ்டாஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்கள். ஆனால், லபுஷேன் அணியில் இருப்பார் என ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக லபுஷேன் 53 போட்டிகளிலும் , ஸ்மித் 51 போட்டிகளிலும் விளையாடி இருந்தார்கள். தற்போது, அந்த சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 எடிஷனுக்கான போட்டிகள் தொடங்கிவிட்டன.

இலங்கை அணி வங்கதேசத்துடனும் இந்திய அணி இங்கிலாந்துடன் விளையாடி வருகின்றன.

ஆஸி. அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் இங்லீஷ், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், மிட்செல் ஸ்டார்க், ஷான் அப்பாட், ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன், மாட் குன்னஹ்மேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலையுச்சியின் காற்றாக... சல்மா அருண்!

அம்மன் கண்களில் இருந்து வழிந்த நீர்! பக்தர்கள் பரபரப்பு!

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகிறது திமுக: இபிஎஸ்

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

2025-இல் 195 ஸ்டிரைக் ரேட், 57 சராசரி... உச்சத்தில் இருக்கும் டிம் டேவிட்!

SCROLL FOR NEXT