டிம் பெய்னி  ஏபி
கிரிக்கெட்

ஆஸி. ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக டிம் பெய்னி நியமனம்!

தலைமைப் பயிற்சியாளராக டிம் பெய்னி நியமிக்கப்பட்டது குறித்து...

DIN

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிம் பெய்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் ரீதியாக சக பெண் பணியாளருக்கு கடந்த 2021-இல் குறுஞ்செய்தி அனுப்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியவர் டிம் பெய்னி. பின்னர், கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற்றார்.

முன்னாள் ஆஸி. கேப்டனும் தற்போதைய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளருமான 40 வயது டிம் பெய்னி ஆஸி. ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஏ அணியுடன் ஆஸ்திரேலியா ஏ அணி வரும் ஜூலை மாதத்தில் 4 நாள் ஆட்டம் கொண்ட 2 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

அடுத்ததாக செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவுடன் சிவப்பு, வெள்ளைப் பந்து போட்டிகளில் ஆஸி. ஏ அணி விளையாட இருக்கிறது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனும் அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் தொடக்கத்தில் விளையாடும் ஆஸி. ஏ அணிக்கும் டிம் பெய்னி தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார்.

இதற்கு முன்பாக ஆஸி. ஏ அணிக்கு துணை பயிற்சியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

டிம் பெய்னியுடன் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆடம் கிரிஃபித் இணைந்துள்ளார்.

ஆஸி. ஏ அணி: ஜோல் கர்டிஸ், ஹாரி டிக்‌ஷன், ஜணன்டன் ஜெ, கம்பெல் கெல்லவே, அங்குஸ் லவெல், ரஃபேல் மக்மிலன், ஆலி பீக்கி, லியோட் போப், நிவேதன் ராதாகிருஷ்ணன், ஜேசன் சங்கா, லியாம் ஸ்கௌட், லச்லான் ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

SCROLL FOR NEXT