ரிஷப் பந்த் படம்: ஏபி
கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: உச்சத்துக்கு முன்னேறிய ரிஷப் பந்த்!

இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியது குறித்து...

DIN

இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7-ஆவது இடத்துக்கி முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்திய அணி முதலிரண்டு இன்னிக்ஸில் 471, 364 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465, 373 ரன்களை எடுத்து வென்றது.

இந்தத் தொடரில் இந்தியாவின் சார்பாக விளையாடிய ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து (134, 118) அசத்தினார்.

27 வயதாகும் ரிஷப் பந்த் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர்களில் முதல்முறையாக இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தவராக சாதனை நிகழ்த்தினார்.

இந்தச் சிறப்பான பேட்டிங்கின் மூலம் ரிஷப் பந்த் தனது அதிகபட்ச தரவரிசையான 7-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை

1. ஜோ ரூட் - 889 புள்ளிகள்

2. ஹாரி புரூக் - 874 புள்ளிகள்

3. கேன் வில்லியம்சன் - 867 புள்ளிகள்

4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 851 புள்ளிகள்

5. ஸ்டீவ் ஸ்மித் - 824 புள்ளிகள்

6. டெம்பா பவுமா - 806 புள்ளிகள்

7. ரிஷப் பந்த் - 801 புள்ளிகள்

8. பென் டக்கெட் - 787 புள்ளிகள்

9. கமிந்து மெண்டிஸ் - 784 புள்ளிகள்

10. சௌத் ஷகீல் - 739 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் திருட்டு

ஆவணி திருவிழா: திருச்செந்தூா் கோயிலில் கொடிப்பட்ட வீதி உலா

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

SCROLL FOR NEXT