ஜெய்டென் சீல்ஸ்.  படம்: ஏபி
கிரிக்கெட்

ஐசிசி நடத்தை விதிமீறல்: மே.இ.தீ. வீரருக்கு அபராதம்!

மேற்கிந்தியத் தீவுகள் வீரருக்கு அளிக்கப்பட்ட அபராதம் குறித்து...

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜெய்டென் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸி. அணி 33 ஓவர்களுக்கு 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸ் விக்கட்டை வீழ்த்திய மே.இ.தீ. அணி வீரர் ஜெய்டென் சீல்ஸ் கிளம்பு என்பதுபோல சைகை காண்பிப்பார்.

ஐசிசி நடத்தை விதிமுறையின்படி ஜெய்டென் சீல்ஸுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஜெய்டென் சீல்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சீல்ஸ் பேசியதாவது:

நான் எதையும் குறிப்பிட்டு அப்படி செய்யவில்லை. அது விரக்தியில் வெளியாகிய ஒரு சைகை. பாட் கம்மின்ஸ் சில நல்ல ஷாட்டுகளை ஆடினார். நான் ஓய்வறை அங்கிருக்கிறது என்பதைத்தான் காட்டினேன் எனக் கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளில் இது 2-ஆவது முறை என்பதால் அவருக்கு 2 தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

Summary

West Indians fast bowlerjayaden Seals has been fined 15% of his match fee and given a demerit point for his send-off to Pat Cummins on the first day of the Barbados against aussies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

பிளாக்மெயில் வெளியீடு ஒத்திவைப்பு!

உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!

மோசடிப் புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

SCROLL FOR NEXT