ஷமர் ஜோசப்.  படம்: ஏபி
கிரிக்கெட்

நன்றாக பந்துவீசியும் விக்கெட் இல்லை: பும்ராவை விட அதிர்ஷ்டம் குறைந்த ஷமர் ஜோசப்!

வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் தவறவிடப்பட்ட கேட்ச்சுகள் குறித்து...

DIN

வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் தவறவிடப்பட்ட கேட்ச்சுகள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் கேட்ச்சுகள் மிகவும் முக்கியமானது. அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டத்தையே மாற்றும் திறனுடையது.

சமீபத்தில் இந்திய அணியினர் தவறவிட்ட கேட்ச்சுகளால் இங்கிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ஷமேர் ஜோசப் வீசிய ஓவரில் 2 கேட்ச்சுகள் தவறவிடப்பட்டன.

2014-க்குப் பிறகு யாருடைய ஓவரில் அதிக கேட்ச்சுகள் தவறவிடப்பட்டுள்ள பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஷமர் ஜோசப் முதலிடமும் இந்தியாவின் பும்ரா 4-ஆவது இடம் பிடித்துள்ளார்கள்.

வேகப் பந்துவீச்சாளர்கள் ஓவரில் தவறவிடப்பட்ட கேட்ச்சுகள்

1. ஷமர் ஜோசப் - 204.4 ஓவர்கள் - 11

2. ககிசோ ரபாரா - 298. 3 ஓவர்கள் - 11

3. மிட்செல் ஸ்டார்க் - 362.3 ஓவர்கள் - 10

4. ஜஸ்ப்ரீத் பும்ரா - 410.4 ஓவர்கள் - 9

ஆஸி.க்கு எதிராக ஷமர் ஜோசப் சிறப்பாக பந்துவீசி வருகிறார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

மீதமுள்ள 3 நாள்களில் எத்தனை விக்கெட்டுகள் எடுப்பார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசத்திய குழந்தைகள்...

ஆந்திரம்: முன்னாள் காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி வைரஸ் ஊசி செலுத்திய பெண் கைது

விசில் சின்னத்தை அறிமுகம் செய்த தவெக தலைவர் விஜய்! | TVK

ஏப்ரல் வெளியீட்டில் கர?

மீல் மேக்கர் குழம்பு

SCROLL FOR NEXT