வருண் சக்கரவர்த்தி முழுமையாக நான்கு ஓவர்கள் வீசியிருந்தால்... முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி முழுவதுமாக ஓவர்கள் வீசியிருந்தால் 5 அல்லது 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி முழுவதுமாக ஓவர்கள் வீசியிருந்தால் 5 அல்லது 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு குரூப் ஏ பிரிலிருந்து இந்த இரண்டு அணிகளுமே முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி முழுவதுமாக ஓவர்கள் வீசியிருந்தால் 5 அல்லது 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தினர். ஆனால், அர்ஷ்தீப் சிங் முழுமையாக நான்கு ஓவர்களை வீசவில்லை. ஷிவம் துபே இரண்டு ஓவர்கள் மட்டுமே முழுமையாக வீசினார். ஹார்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசினார். இதிலிருந்து, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் எனத் தோன்றுகிறது.
இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். இலங்கையில் இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி விளையாடியிருக்கிறது. கொழும்புவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கிறேன். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் ஹார்திக் பாண்டியா முதல் ஓவரை வீசியதும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் விளையாடமாட்டார் என்பதை உணர்த்துவதாகவே இருந்தது.
வருண் சக்கரவர்த்தி இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். அவர் முழுமையாக நான்கு ஓவர்களை வீசியிருந்தால், 5 அல்லது 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். வருண் சக்கரவர்த்தியிடம் சிறப்பான விஷயம் என்னவென்றால், அவரை பந்துவீச அழைக்கும்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தக் கூடியவர். மூன்று ஓவர்கள் வீசி அக்ஷர் படேல் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியது நல்ல அறிகுறி என்றார்.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி, 7 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
If Varun Chakravarthy had bowled the full overs in the T20 World Cup match against Namibia, he would have taken 5 or 6 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.